» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்: கோவில்பட்டி அருகே பரபரப்பு!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 3:25:08 PM (IST)



கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஜோதி. சரவணன் தற்பொழுது குடும்பத்தோடு சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார். ஜோதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து மனநிலை சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த சில தினங்களாக ஜோதி மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் சங்கரன்கோவிலில் இருந்து வடக்கு திட்டங்குளம் வந்த ஜோதி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் போலீசார், தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். கீழே இறங்க மறுத்துவிட்டார். மேலும் பேச சென்ற அதிகாரிகள் மீது கற்களை வீசினார். 



இதையெடுத்து சங்கரன்கோவிலில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஜோதி கீழே இறங்கி வந்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அவருடைய பெற்றோருக்கு அறிவுறுத்தி சிகிச்சை அளிக்க நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory