» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வாகனங்களில் தீவிர சோதனை!!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 3:04:31 PM (IST)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசி வழியே மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று பிற்பகல் தொடர்பு கொண்ட மர்ம நபர், "தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ள வாகனத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. வெடிகுண்டு புரளியில் ஈடுபட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.