» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 4:40:11 PM (IST)
தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி காமராஜ் காய்கனி மார்க்கெட் சிக்னல் பகுதியில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் மேஜைகளை போட்டும் பொருட்களை வைத்தும் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், ஏ.வி.எம். மருத்துவமனை பகுதியில் இருந்து பழைய பஸ்டாண்டு வரை நடந்து செல்லும் பொதுமக்கள், மிக மிக சிரமப்படுகிறார்கள்.
மேலும், மார்க்கெட் தெற்கு வாசல் அருகே நடைபாதையில் பாதாள சாக்கடைக்கான மூடிகள் இல்லாததால், பெரிய சிமெண்ட் பிளேட்களை போட்டு மூடியுள்ளனர். அந்த பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிமெண்ட் பிளேட்களில் தடுக்கி விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே, நடைபாதையில் பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
ஆமாAug 2, 2024 - 10:03:27 AM | Posted IP 172.7*****
எல்லாம் சாக்கடை துட்டு மாநகராட்சி பயலுக. உருப்படாது
SornapandianAug 1, 2024 - 10:24:35 PM | Posted IP 162.1*****
பாவப்பட்ட நடைபாதை வியாபாரிகளிடம் மனசாட்சி இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வரும் வேட்டையரர்கள் ஒழியும் வரை விடிவு ஏற்படாது.
MakkalAug 1, 2024 - 09:30:21 PM | Posted IP 172.7*****
கோயில் விழாக்கள் வாரக்கணக்கில் நடத்தப்படுகின்றன சாலைகள் ' தெருக்கள் நெடுகிலும் ஒலி பெருக்கி குழாய்கள் வைக்கப்பட்டு அதீக அளவில் சத்தம் வைக்கப்படுகிறது அதுவும் இரவு 12 மணிக்கு மேலும் தொடர்கிறது சிறு பிள்ளைகள் படிக்கும் பிள்ளைகள மற்றும் பொது மக்களுக்கும் இடையூராக உள்ளதால் காவல் துறை நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
கருப்பசாமிAug 2, 2024 - 02:22:24 PM | Posted IP 172.7*****