» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரி மீது தேசிய ஆணையத்தில் தூய்மைப் பணியாளர்கள் புகார்!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 3:35:03 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை கொத்தடிமைப் போல நடத்துவதாக மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தாெடர்பாக தூய்மை பாரதம் இயக்கம் சார்பில், தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களில் அரசு வீதிகளின்படி ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் தகுதியுள்ள அனைத்து பணியாளர்களும் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும்.
வேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக பணியாளர்களுக்கும் சமமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணிக்கு மாநகராட்சி தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பது நிறுத்தப்பட்டு அரசு மாநகராட்சினுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்ததற்கு மதுரை உயர்நீதிமன்றத்தினுடைய ஆணையின்படி சிறப்பு ஊதியம் ரூ.15,000 வழங்கப்பட வேண்டும்.
பிஎப், இஎஸ்ஐ முறைப்படுத்தப்பட வேண்டும் சம்பளத்துடன் வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் தொழிலாளர்கள் மரியாதையாக நடத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி, வீட்டு மனைக்கு கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களை கொத்தடிமை போல் நடத்தி வரும் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அதிகாரி ஸ்டாலின் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக மாறுதல் இல்லாமல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்ற காரணத்தினால் தொழிலாளர்களை அடிமைத்தனமாக நடத்தும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் சித்ரங்கன், துணைத் தலைவர் சிவராமன், செயலாளர் வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
கார்த்திக்கேயன்Aug 1, 2024 - 10:37:14 PM | Posted IP 162.1*****
அதிகாரிகள் 2 வருடம் ஒரு முறை மாற்ற வேண்டும்
ஆம்,துப்புரவு அலுவலராக அவர் சுகாதார அலுவலர் என்று போடு வைத்துள்ளார் பணம் வாங்காமல் கடவுளே நேரAug 1, 2024 - 07:48:45 PM | Posted IP 162.1*****
அதே
MakkalAug 2, 2024 - 10:04:51 AM | Posted IP 162.1*****