» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆணைய தலைவர்

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 3:10:33 PM (IST)



தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக உருவாக்கப்படும் என்று துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறினார். 

இது தாெடர்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வருடத்திற்கு 81.05 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனுடன் தென்தமிழகத்தில், பொது சரக்குகளைக் கையாளுவதிலும் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதிலும் முன்னணி துறைமுகமாக திகழ்கிறது. 

2024-25 நிதியாண்டில், ஜீலை மாதம் 25-ம் நாள் வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 13.17 மில்லியன் டன்களை கையாண்டு 5.29 சதவிகித வளர்ச்சியும், சரக்குபொட்டகங்களை பொருத்தவரையில் 2.47 டிஇயுக்களையும் கையாண்டு 4.73 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது. 

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தற்காலிகமாக பொது சரக்குகளைக் கையாளுவதில் எதிர்கொள்ளும் நெருக்கடி சூழலில் கூட இந்த நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு துறைமுகம் இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கும் சரக்கு கையாளும் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்கும் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நேரத்தை குறைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் துறைமுகம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு ஏதுவாக அமையும். துறைமுகம் குறைந்த செலவில் சரக்குகளைக் கையாளுவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. 

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3-ஐ (NCB-3) ஆழப்படுத்தும் பணி அக்டோபர் மாதம் துவங்கபட உள்ளது. அதே சமயம் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயிலை ஆழப்படுத்தும் பணி மற்றும் கப்பல் திரும்பும் சுற்றுபாதையினை (turning circle area of the Port) ஆழப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது. 

வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக M/S.JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வடக்கு சரக்கு தளம் -3 ஐ இயந்திரமயமாக்கும் திட்டமானது 18 மாதற்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2024-25 நிதியாண்டிற்கள் ஆழப்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் 100-120 டன் திறன் கொண்டு நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் (Harbour Mobile Cranes) பயன்படுத்தி 2 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். 

சரக்குபெட்டக வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு வசதியாக வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3வது சரக்குபெட்டக முனையமான ஜே.எம். பக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி இன்டர்நேஷ்னல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் (Tuticorin International Container Terminal Private Limited) இயக்க உள்ளது. இந்த சரக்குபெட்டக முனையமானது 14.20 மீட்டர் ஆழம், 370 மீட்டர் நீளமும் கொண்டமையால் ஆண்டிற்கு 6 இலட்சம் டிஇயு சரக்குப்பெட்டகங்களை கையாள முடியும். 

இத்தளத்தின் கட்டமைப்புப் பணிகள், தரைதளம் அமைக்கும் பணிகள், கப்பலை கையாளும் போது கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி (Fenders) அமைத்தல் மற்றும் தடுப்பு காப்பு (bollards) அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என்பதை கருத்தில் கொண்டு தளங்களை சீரமைத்தல், இயந்திரங்களை இயக்குவதற்கு வசதியாக இரயில் பாதை அமைத்தல் மற்றும் அதன் செயல்பாட்டுப் பணிகள் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

வருங்காலத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கூடுதலாக 2 மில்லியன் டன் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக நங்கூரமிடப்பட்டுள்ள சரக்கு கப்பல்களில் இருந்து சரக்குகளை :31.07.2024  கையாளுவதற்கு மிதவை இயந்திரங்கள் மற்றும் 3 சுமைபடகுகள் (barges) இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 120-மீட்டர் நீளமும், 52-55 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை கப்பல்களை கையாளுவதற்காக வசதியாக எண்ணைத் தளம் 2 -ல் கப்பல் பாதுகாப்பிற்கான ஒரு அமைப்பு (mooring dolphins) அமைக்கும் பணிகள் 2025-ம் ஆண்டின் மத்தியில் முடிக்கப்படும். 

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உரம் மற்றும் உரமூலப் பொருட்கள் சார்ந்த கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் (TANGEDCO) வ.உ.சி. துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலக்கரித்தளம் 2-ல் உள்ள கன்வேயர் அமைப்பை நீக்குதல் மற்றும் 3 ஹாப்பர் அமைப்பினை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தளத்தின் மிதவை ஆழம் 12.7 மீட்டர் ஆகும். இப்பணியானது 31, ஜீலை 2024-க்குள் முடிக்கப்படும். 

மேலும் கூடுதலாக துறைமுகத்தில் 13 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக நிலக்கரி தளம் -1ல் கன்வேயர் இணைப்பு நிறுவப்பட உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனத்தால் (TANGEDCO) நிலக்கரி தளம்-1 செயல்படாத நேரத்தில் தளத்தினை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு 0.72 மில்லியன் மெட்ரிக் டன் வருடத்திற்கு உயர்த்திற்கு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கன்வேயர் இணைப்பு கட்டுமான பணியானது 30 அக்டோபர் 2024 முடிக்கப்படும். 

துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் -2-ல் கூடுதலாக ஒரு நாளைக்கு 25,000 டன் சரக்குகளை கையாளக் கூடிய 100 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. வடக்கு சரக்கு தளம்- 2 மற்றும் வடக்கு சரக்கு தளம் -3 ஒவ்வொன்றிலும் கூடுதலான சரக்குதளப்பகுதி 5000 சதுர மீட்டர் நிலப்பரப்பு உருவாக்கப்படும். இப்பணியானது நவம்பர் 2024-ல் முடிக்கப்படும். மேலும் சரக்குதளம் 5 மற்றும் 6-ல் காற்றாலை இறகுகளை தடையில்லாமல் கையாளுவதற்கு வசதியாக 2 கிராலர் இயந்திரங்கள் (crawler crane) செப்டம்பர் 2024-ல் நிறுவப்பட உள்ளது. 

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில் மேலே குறிப்பிட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் இந்தி நிதியாண்டு முடிவில் துறைமுகம் 50 மில்லியன் டன்னுக்கு மேல் சரக்குகளை கையாள முடியும், மேலும் சர்வதேச சரக்கு போக்குவரத்து வர்த்தகத்திற்கு தடையற்ற சரக்கு கையாளுதல் மற்றும் சரக்குக் கையாளும் செயல்பாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க துறைமுகம் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 

எங்கள் வர்த்தக பங்குதாரர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory