» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் வயநாடு மக்களுக்காக சிறப்பு திருப்பலி!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 12:48:17 PM (IST)
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது. இன்று ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
லூசியா மாற்றுத்திறனாளி இல்லை இயக்குனர் பென்சன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.