» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயாவில் உலக கழுத்துக்குட்டை தினம்

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 12:38:02 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் உலக கழுத்துக்குட்டை தினம் கொண்டாடப்பட்டது.

பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் உலக கழுத்துக்குட்டை தினம் இன்று 3-ம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறிக்கோளுடன் இந்த தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு "ஒரு சிறந்த உலகத்திற்கான சாரணன்” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. 

சாரணர்கள் சமூக சேவை மூலம் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGS) அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செயல்பட வேண்டும். என வலியுறுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்களால் சமூகங்களின் தேவைகளை பற்றி அறிந்து கொள்ளவும், மற்றவர்களின் வாழ்க்கையில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory