» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம்: 180 பேர் கைது!

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:42:25 AM (IST)



தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 

இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து இடதுசாரிக்கட்சிகள் சார்பில் ஆக.1-ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்ததது. 

மறியல் போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உட்பட 75பேரை மத்திய பாகம் போலீசார்  கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



இதுபோல் மத்திய அரசைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

மறியலில் மாநில செயற்குழு உறுப்பினர்  நூர்முகம்மது, மாவட்ட செயலாளர் (CPI-ML) முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், பேச்சிமுத்து, அப்பாத்துரை, சண்முகராஜ், ராஜா, இடைக்கமிட்டி செயலாளர்கள் சங்கரன், முத்து, முனியசாமி, ரவிதாகூர், கணபதி சுரேஷ், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 105 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து

தலைமைAug 1, 2024 - 04:00:26 PM | Posted IP 162.1*****

நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டு கட்டை போடுவதும், பொய் பிரசாரமும்தான் இவர்களது தொழில்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory