» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தப்பியோடிய கைதி கைது: கழிவறையில் வழுக்கி விழுந்து காயம்!!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 10:02:56 AM (IST)
தூத்துக்குடியில் போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பியோடிய கைதியை தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் ஹைகோர்ட் மகாராஜா(30). இவர் கொலை முயற்சி வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி விளாத்திகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரை கடந்த மார்ச் 5ஆம் தேதி விசாரணைக்காக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றாராம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், மதுரையில் சிறுவனை ஆட்டோவில் கடத்தி ரூ. 2 கோடி கேட்ட வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஹைகோர்ட் மகாராஜாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவர் கோயம்புத்தூரில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று ஹைகோர்ட் மகாராஜாவை நேற்று முன்தினம் கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் விசாரணையின் போது கழிவறையில் வழுக்கி விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மஹாராஜா மீது கொலை முயற்சி, குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
KumarAug 1, 2024 - 11:26:53 AM | Posted IP 162.1*****