» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அந்தோணியார்புரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை!

புதன் 31, ஜூலை 2024 4:50:54 PM (IST)

தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள அந்தோணியார்புரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். 

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்தோணியார்புரத்தில் நான்கு வழிச் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 7 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படாதது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே தூத்துக்குடி - நெல்லையை இணைக்கக் கூடிய இந்த முக்கியமான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இரண்டு சுங்க சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனியாக ஒரு சாலை வசதி ஏற்படுத்தி தர உத்திரவிட வேண்டும். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சாலையில் தற்பொழுது புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தூசி மற்றும் புழுதி பறந்து காற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆகவே இதனை தடுக்க அப்பகுதியில் தண்ணீர் தெளிப்பதோடு விஞ்ஞான முறையில் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

Thoothukudi kaaranJul 31, 2024 - 11:51:54 PM | Posted IP 162.1*****

Also 3rd mile road very dangerous condition.main entrance road in tuticorin thousand of vehicles in the road daily But very poor condition pls drive safe tuty people

அது என்ன செய்தி ?Jul 31, 2024 - 09:58:25 PM | Posted IP 162.1*****

ஹமாஸ் தலைவரா? ஹமாஸ் ஒரு தீவிரவாதி இயக்கம் தானே, "ஹமாஸ் தீவிரவாதி தலைவன் பலி" அப்படி தலைப்பு செய்தி போடுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory