» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்: ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 30, ஜூலை 2024 10:46:00 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கென தனியே உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகி அரசின் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தாெடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கென தனியே இணையதள பக்கம் மற்றும் வலை பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள பக்கத்தில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியவாசியமான சான்றிதழ்கள் பெறுவது குறித்த விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலை பயன்பாட்டின் வாயிலாக தங்களுக்கு தேவையான விவரங்களை கண்டு பயன் பெறலாம்.
உறுப்பினர் சேர்கைக்கான வலை பயன்பாடு 18.06.2024 அன்று முதல் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. வலை பயன்பாட்டின் மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் இணையதளம் மூலம் நேரடியாகவும் அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம்.
பதிவு செய்யும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் வலை பயன்பாட்டு மூலம் அரசின் நலத்திட்டங்களாக சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் போன்ற உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
Sesammal.VJul 30, 2024 - 01:14:13 PM | Posted IP 162.1*****
Hospand No
Sesammal.VJul 30, 2024 - 01:13:10 PM | Posted IP 162.1*****
Hospand no
சேசம்மாள்Jul 30, 2024 - 01:12:28 PM | Posted IP 172.7*****
கனவர் இல்லை
P. சத்யாJul 30, 2024 - 01:29:27 PM | Posted IP 162.1*****