» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5993 மனுக்கள் : ஊராட்சி மன்ற தலைவர் தகவல்!

வியாழன் 25, ஜூலை 2024 11:04:54 AM (IST)



மாப்பிள்ளையூரணியில் 4 நாட்களாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5993 கோாிக்கை மனுக்கள் அளித்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தெரிவித்தார். 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம் கடந்த 4 நாட்கள் நடைபெற்றது. 

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 5993 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர். அதில் சிலருக்கு நில பட்டாவும் நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் இரண்டுநாட்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு சிலருக்கு நில பட்டாவும், நலிந்தோர் உதவித்தொகைக்கான ஆணையையும் வழங்கினார். 

அனைத்து துறை அதிகாாிகளும் அலுவலர்களும் முழுமையாக ஓத்துழைப்பு வழங்கினார்கள். அதில் மக்களின் பங்களிப்பாக ெகாடுக்கப்பட்டுள்ள கோாிக்கை மனுக்களில் சுமார் 4000 மனுக்கள் வரை இலவச வீட்டு மனை பட்டாகேட்டு விண்ணப்பித்துள்ளனர். அனைத்து மனுக்களும் முறையாக முறைப்படுத்தி அவர்களது கோாிக்கைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, ஆகியோருடன் இணைந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிா்வாகம் முழுமையாக துணை நின்று பணியாற்றுவோம் என்று கூறினார். 

நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகரன், ராஜலட்சுமி, தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர்கள் சரவண வேல்ராஜ், சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலெட்சுமி, மீனாட்சி, திருவரங்க செல்வி, கணேசமூர்த்தி, பாலமுருகன், மாாிசங்கா், பிரேமலதா, நட்டார் செல்வம், பாத்திமாராணி, பேச்சியம்மாள், வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதி, உதவி பொறியாளர் ஜீவிதா, இளநிலை உதவியாளர் அற்புதராஜா, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன்,   உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory