» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் திடீர் மாற்றம்!
செவ்வாய் 23, ஜூலை 2024 4:35:13 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக எஸ்.ஞானசேகரன் நியமிக்கப்ட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த எம்.கார்த்திக், திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக தஞ்சாவூர் இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஞானசேகரன் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட இணை ஆணையர் பழனிகுமார், குமரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 5 கோவில்களில் இணை ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.