» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கி சுடும் போட்டி: தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் முதலிடம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 3:52:55 PM (IST)



வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடந்த நெல்லை சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமண்ய பால்சந்திரா முதலிடம் பெற்றார். 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று (22.07.2024) மற்றும் இன்று (23.07.2024) ஆகிய இரண்டு நாட்கள் திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  உட்பட திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 3 காவல் உதவி கண்காணிப்பாளர்கள், 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 3 திருநெல்வேலி மாநகர உதவி ஆணையர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3 உதவி தளவாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார் முதலிடத்தையும், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா 2வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பட்டாலியன் உதவி தளவாய்  ரவி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

அதே போன்று பிஸ்டல்(Pistol) (அல்லது) ரிவால்வர்(Revolver) ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா  முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ்குமார் 2வது இடத்தையும், திருநெல்வேலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியன் உதவி தளவாய்  பூபதி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ்குமார் 2வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பிரிவு பட்டாலியன் உதவி தளவாய்  பூபதி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார்  பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வின்போது கமாண்டோ படை பிரிவின் காவல் கண்காணிக்காளர்  ஜே.பி. பிராகர் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory