» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாப்பிள்ளையூரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : நலதிட்ட பணிகள் துவக்கம்

செவ்வாய் 23, ஜூலை 2024 3:44:51 PM (IST)



மாப்பிள்ளையூரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்து  நலதிட்ட உதவிகளை வழங்கினார். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் 2ம் நாள் முகாம் நடைபெற்றது.  தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளரும் எம்எல்ஏ-வுமான சண்முகையா தலைமை வகித்து இரு பயனாளிகளுக்கு பட்டா மற்றும் ஓரு பயனாளிக்கு நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை  வழங்கினார். இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகரன், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலெட்சுமி, மீனாட்சி. திருவரங்க செல்வி,  வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பகவதிகுமாா், சுடலைமணி, முத்துகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார்,  மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், கூட்டுறவு சார்பதிவாளர் செயலாட்சியர் கிருஷ்ணன்  உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory