» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு முக்கியத்துவம் ஏன்? காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி!
செவ்வாய் 23, ஜூலை 2024 3:24:19 PM (IST)
ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தனுஸ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ முன்னிலை வகித்தார், முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது : அனைத்து மாநிலத்திற்கும் பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதியை எதற்காக பிகாருக்கும், ஆந்திராவுக்கும் ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. இதற்குப் பெயர்தான் பாசிசம். இதுதான் சந்தர்ப்பவாதம். ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக, எல்லா மாநிலங்களின் நிதியையும் ஆந்திராவிற்கும் பீகாருக்கும் கொடுப்பது என்ன நியாயம்?
இந்த ஆட்சியை தற்காலிகமாக தக்க வைத்துக் கொள்ள இப்படிப்பட்ட பெரிய தவறை நிதி அமைச்சகம், ஒன்றிய அரசும் செய்துள்ளது. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின்படி வெள்ள நிவாரண நிதியோ, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியோ, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடோ முற்றிலும் வழங்கப்படாமல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
நிர்மலா சீதாராமன் வாசித்த நிதிநிலை அறிக்கையில் வழக்கமாக வாசிக்கப்படும் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை, கடந்த ஆண்டு வெள்ளத்தால் தூத்துக்குடி கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய அரசு ஒரு பைசா கூட நிவாரணம் வழங்கவில்லை. தூத்துக்குடியை மட்டுமல்ல தமிழ்நாடையே ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து 40 எம்பிகளும் பேசி உள்ளனர். வெளிநிடப்பு செய்துள்ளனர். மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தமிழ்நாட்டை ஓரம் கட்டுகிறார். பூரண மதுவிலக்கு என்பதே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வம், அருள்பெத்தையா, தணிகாசலம், செ.ராம்மோகன், சொர்ண சேதுராமன், ராணி வெங்கடேசன், டேனியல்ராஜ், சுடலையாண்டி, ஏபிசிவி சண்முகம், மகேந்திரன், காமராஜ், அருள், முத்துக்குட்டி, சிவசுப்பிரமணியன், ஜெயக்குமார், பிரேம்தூர் மாரிமுத்து, சுப்பாராயுளு, அருண்பாண்டியன், பொன்னுச்சாமிபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
வாழ்த்துக்கள்.Jul 23, 2024 - 07:00:49 PM | Posted IP 162.1*****
உங்களால் பத்து பைசா பிரயோஜனம் கிடையாது. நாற்பது எம்பிக்கள் இருந்தும் ஒன்றும் நடக்க போவதில்லை. பாராளுமன்றத்தில் போய் நல்ல கூவிட்டு வாங்க!.அது மட்டும்தான் உங்களால் முடியும்.
40 MPJul 23, 2024 - 04:59:24 PM | Posted IP 162.1*****
40 MP thamilaga makkal ungaluku ethuku koduthargal???
மத்திய அரசுJul 23, 2024 - 03:46:51 PM | Posted IP 162.1*****
40 MPகள் சேர்ந்து சத்தமாக கேளுங்கள்.குறை சொல்ல வந்துட்டாங்க.....
கதை படித்தவன்Jul 24, 2024 - 08:54:37 AM | Posted IP 162.1*****