» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின் கட்டணத்தை மூன்றாவது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 23, ஜூலை 2024 3:08:41 PM (IST)
மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி பொது மக்களை வதைப்பதை கண்டித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடை காரணம் காட்டி வழங்காமல் நிறுத்தியதை கண்டித்தும், திமுக அரசிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மின் கட்டண உயர்வு, ரேசன் கடையில் வழங்கும் அத்தியாவசிய பொருட்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாரயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் போன்ற விவகாரங்களை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்தும், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினை சுட்டிக்காட்டியும் பேசினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாநில மீனவர் அணி துணை தலைவர் ஏரோமியாஸ், வர்த்தக அணி இணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் எம்.பெருமாள், அம்மா பேரவை விஜயகுமார், இலக்கிய அணி நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, மாணவரணி பில்லா விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தனராஜ், சிறுபான்மை பிரிவு கே.ஜெ.பிரபாகர், விவசாய அணி சுதர்சன்ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண்ஜெபக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, இணைச் செயலாளர் செரினா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், உட்பட திரளானோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.