» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெங்கு எதிர்ப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செவ்வாய் 23, ஜூலை 2024 11:44:28 AM (IST)



அனவரதநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு எதிர்ப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஒவ்வொரு ஜூலை மாதமும் டெங்கு எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் உத்தரவின்படி அனவரத நல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு எதிர்ப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கன்னிகா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரவெங்கடேசன் கொசு புழுக்கள் எவ்வாறு உற்பத்தி ஆகின்றது கொசு புழுக்களை அழிக்கும் முறை டெங்கு காய்ச்சல் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் வெங்கடேசன் டெங்கு காய்ச்சலை பற்றி மாணவ மாணவிகள் இடையே எடுத்துரைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் பாலகண்ணன், நித்திஷ் மற்றும் சார்பின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன் நன்றியுரை கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory