» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நேரு பூங்காவில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு!

திங்கள் 22, ஜூலை 2024 10:12:47 AM (IST)



தூத்துக்குடி நேரு பூங்காவில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்.
 
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலையில் உள்ள நேரு பூங்காவில் கடலரசர் சி.ஜ.ஆர். மச்சாது திருஉருவச் சிலை அமைக்கப்பட்டு இருந்து வருகிறது. அது சிலகாலங்களாக பராமாிப்பு இல்லாத நிலை இருப்பதால் அது முறையாக சீர் செய்து சமுதாய மக்களின் சாா்பிலும் பொதுநல அமைப்பை சேர்ந்தவர்களும் அவரது மாலை அணிவத்து மாியாதை செய்வதற்கு ஏற்றவாறு வழித்தடத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து அப்பூங்காவினை மேயர் ஜெகன் பொியசாமி நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வரும் நாட்களில் வழித்தடங்கள் ஏற்படுத்தி தரப்படும் என்று மேயர் உறுதி அளித்துள்ளார். ஆய்வின்போது, பரதர் நல சங்கத்தின் தலைவர் ரெனால்டு வில்லவராயர், பொருளாளர் காஸ்ட்ரோ, பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்Jul 22, 2024 - 06:46:26 PM | Posted IP 162.1*****

அப்படியே முத்து நகர் கடற்கையில் உள்ள நிறைய கடைகள் கடற்பகுதியில் அதிகமான குப்பைகளை வீசிவிடுகிறார்கள். கடலில் அதிகமான குப்பைகள் உள்ளன. ஆதலால் கடற்பகுதியில் உள்ள கடைகளை அகற்றி விட்டு ஒரே இடத்தில் செயல்பட அனுமதியுங்கள் .

YENKAYJul 22, 2024 - 06:39:17 PM | Posted IP 172.7*****

LADIES TOILET ROOMMAI THIRANDHU UDHAVAAMAL DUTY MAARUM RENDU PANIYALARGALUM ALAIKKALITHANAR. KADAISIVARAI THIRAKKAVEILLAI. PLEASE ADVISE THEM MAYOR SIR..

ஜார்ஜ் ரோடுJul 22, 2024 - 10:42:12 AM | Posted IP 162.1*****

ஜார்ஜ் ரோடு அருகில் தருவைகுளம் மைதானம் செல்லும் வழியில் குண்டும் குழியுமான சாலைகளை சரி பண்ணுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory