» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

ஞாயிறு 21, ஜூலை 2024 8:01:13 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சங்கரப்பேரி விளக்கில் இருந்து பெரிய பள்ளம் ஓடையில் இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் புறவழிச் சாலையில் இருந்து இந்த ஓடை வழியாக மழை நீரானது தருவைக்குளம் சாலை வழியாக கடலுக்குள் செல்கிறது. 

அதனைத் தொடர்ந்து மடத்தூர் பகுதியில் அமைந்துள்ள குளத்தையும் புறவழிச் சாலையில் உள்ள உப்பாற்று ஓடையையும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகரத்துக்குள் மழை நீர் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஓடைகளை செம்மைப்படுத்தி அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை மேயர் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், இசக்கிராஜா, திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ஏரியா காரன்Jul 21, 2024 - 09:36:56 PM | Posted IP 162.1*****

முதலில் மாநகராட்சி அமைத்த பாதாள சாக்கடை வழியாக தான் மழை நீர் ஊருக்குள்ளே புகுந்து பொங்கி வரும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory