» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக்நகர் ரோட்டரி கிளப் சார்பில் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி முகாம்
ஞாயிறு 21, ஜூலை 2024 7:44:41 PM (IST)
கீழஈரால் டான் போஸ்கோ கல்லூரியில் ஸ்பிக்நகர் ரோட்டரி கிளப் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி முகாம் 3 நாட்கள் நடந்தது.
கோவில்பட்டி அருகே உள்ள கீழஈரால் டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் ஆப் ஸ்பிக்நகர், விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி முகாம் 3 நாட்கள் நடந்தது. ஸ்பிக் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் திலகா, ஸ்பிக்நகர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.
பயிற்சிகளை பிஹைவ் கம்யூனிகேஷன் சாம்ராஜ், வசந்தா, எஸ்தர், தாமோதரன் லாவண்யா ஆகியோர் வழிநடத்தினர் பயிற்சி முகாமில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ராதாகிருஷ்ணன் வழங்கி பேசினார். பயிற்சி முகாமில் டான் போஸ்கோ கல்லூரி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்பிக் நகர் ரோட்டரி சங்க செயலாளர் ராமசுப்பு நன்றி கூறினார்.