» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடியரசு தின விழாவில் சாதனையாளர்களுக்கு விருது : ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, ஜூலை 2024 5:39:07 PM (IST)
2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுதின விழாவின்போது பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் பொருட்டு, 2024ஆம் ஆண்டிற்கு தகுதியான நபர்களின் கருத்துரு பெறுவதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் தகுதியான நபர்களின் கருத்துருக்கள் 21.07.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆண்டு தோறும் குடியரசு தின விழா போது அரசியல், சமூகம், நிர்வாகம், கலை மற்றும் கலாச்சாரம், இசை, நடனம், கலைத்துறை, ஓவியம், சிற்பம், சட்டம் (ம) நீதி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களை கெளரவிக்கும் பொருட்டு, 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கௌரவிக்க ஏதுவாக 2024 ஆம் ஆண்டிற்கு தகுதியான நபர்களின் கருத்துரு பெறுவதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 21.07.2024 கீழ்கண்ட விதிமுறைகளின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்
2. தனியரின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான சாதனைகள் தொடர்பாக ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும் (தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் VERDANA)
மேற்கண்ட சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தாங்கள் புரிந்த சாதனைகளை கீழ்கண்டவாறு புத்தக வடிவ கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 நகல்கள் தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
• பொருளடக்கம் (ம) பக்க எண் (Index)
• இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விவரம் (Bio data) மற்றும் Passport Size Photo -2
• தனியரின் சாதனைகள் தொடர்பாக ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும் (தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் VERDANA)
மேற்கண்ட விவரங்கள் அடங்கிய கையேட்டினை 21.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101 என்ற அலுவலக முகவரியில் உடனடியாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
ARUMUGASELVANJul 19, 2024 - 03:56:50 PM | Posted IP 162.1*****