» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடுகளின் சாய்தளத்தால் போக்குவரத்து இடையூறு : மேயரிடம் அமமுக புகார்
வியாழன் 18, ஜூலை 2024 4:40:13 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையின் மத்தி வரை நீீளமாக போடப்பட்டுள்ள வீடுகளின் சாய்தளத்தால் போக்குவரத்து இடயூறு ஏற்படுவதாக மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அவைத் தலைவர் தங்கமாரியப்பன் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி 41வது வார்டு சண்முகபுரம் பிராப்பர் தெரு, 1 & 2 தெருக்களில் குடிநீர் சப்ளைக்காக பேவர் பிளாக் கல்கள் உடைக்கப்பட்டு இருக்கிறது. புதிய சாலை போடும்போது தார் சாலையாக போட வேண்டும்.
தெருக்களின் முகப்பில் தெருவின் பெயரை போர்டுகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். புதியதாக வீடு கட்டுபவர்கள் கால்வாய்க்கு அருகில் வைக்க வேண்டிய சாய் தளத்தை ரோட்டின் மத்தி வரை நீளமாக போட்டு விடுகிறார்கள். அதனால் 30 அடி ரோடு 15 அடி ரோடாக மாறிவிடுகிறது. அதனால் ஆட்டோ, பைக், கார்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகையால் தாங்கள் மாநகராட்சி மூலம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
KumarJul 18, 2024 - 06:48:16 PM | Posted IP 172.7*****