» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்!
வியாழன் 18, ஜூலை 2024 4:06:53 PM (IST)
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
வட்டாட்சியர் பிரபாகரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வட்டச் செயலாளர் சந்தன மாரிமுத்து, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, வட்ட அவைத்தலைவர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.