» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய அளவிலான தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்களைகள்!
திங்கள் 15, ஜூலை 2024 11:10:36 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து தேசிய அளவிலான தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களை பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள மாற்றுத்திறனாளி வீரர்கள் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் தமிழக அளவில் வெற்றி பெற்று, பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்கின்றனர்.
தேசிய அளவிலான தடகள போட்டிக்கு செல்லும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர்களை தூத்துக்குடி பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக துணைத் தலைவர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பயிற்சியாளர் மற்றும் சங்க செயலாளர் ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் வீரர்களின் பெற்றோர்கள் பொருளாளர் நீலராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.