» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவை : லயன் பஸ் நிறுவனம் விளக்கம்

திங்கள் 15, ஜூலை 2024 10:03:10 AM (IST)

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவையாற்றி வருவதாக லயன் பஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகளை லயன்ஸ் பஸ் என்ற தனியார் பஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, அரசு பஸ்களை நிறுத்தும் செய்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக லயன் பஸ் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து சேவையை லயன்ஸ் பஸ் நிறுவனம் வழங்கி வருகிறோம். தடம் எண் 578 நாகர்கோவில்  ராணிதோட்டம் பணிமனை பேருந்து ஆகும். இப்பேருந்து ஆரம்பம் முதல் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.30மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி வழியாக ஸ்ரீவைகுண்டம் வந்து 8.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி சென்று 10.10 மணிக்கு மீண்டும் அதே வழிதடத்தில் நாகர்கோவில் சென்று வந்தது

ஆனால் காலை 7.55 மணிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பேருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் லயன் பேருந்துக்கு பின்னால் 8.25 மணியாக மாற்றப்பட்டுள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும். தமிழக அரசு,போக்குவரத்து கழகம்,போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் லயன் பஸ் நிர்வாகம் ஆகியவர்களின் மீது வீண் களங்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க  முயல்கின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ஜெபராஜ் ஒரேப், பண்டாரவிளைJul 19, 2024 - 11:50:44 AM | Posted IP 162.1*****

Lion Bus மக்கள் விரும்பும் சேவையில் உளBus வாழத்துகள்

DineshJul 16, 2024 - 06:31:28 PM | Posted IP 172.7*****

Intha route la mattum illa ..inum niraya private bus ipdithan kasta kasta paduranga ...

DineshJul 16, 2024 - 06:29:59 PM | Posted IP 162.1*****

Private bus are very good service... private bus pinnadiye government bus pogama....bus illatha time la...bus vitta yarukum entha problem um illa... Thoothukudi to sivakalai route ella private bus pinnadiye government bus porathunala....bus la aal illama poguthu...athunala...yarukum entha use um..illa ....pavum antha private bus la work panra drivers conductors paavum.... family kaga...kasta pattu passangers...ethuranga...athum pinnadiye government free bus varathu nala ..athula majority ladies athula poiruthanha...ithula daliy salary vangura private bus workers than ...kasta paduranga....salary below 700rs aagiruthu....so ..mudinja vara...yarukum entha kastam um varama... service pannunha

muruganJul 15, 2024 - 06:46:11 PM | Posted IP 162.1*****

very good service

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory