» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லோடு ஆட்டோ கதவு உடைந்து சாலையில் தவறி விழுந்த பெண் பலி!

திங்கள் 15, ஜூலை 2024 8:24:54 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே லோடு ஆட்டோ கதவு உடைந்து சாலையில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி மற்றும் வீரன் சுந்தரலிங்கம் நகர் கிராமத்தைச் சேர்ந்த 10 பெண்கள் வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தினமும் பருத்தி எடுக்கும் பணிக்காக லோடு ஆட்டோவில் காலையில் ெசன்று விட்டு, மாலையில் அதே ஆட்டோவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த லோடு ஆட்டோவில் இருக்கையில் 6 பேரும், மற்ற 4 பேர் பின்பகுதி கதவு பகுதியிலும் அமர்ந்து பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் காலையில் அந்த 10 பெண்களும் கிராமத்தில் இருந்து லோடு ஆட்டோவில் தோட்ட வேலைக்கு சென்றனர். அந்த லோடு ஆட்டோவை கவர்னகிரி தெற்குதெருவை சேர்ந்த மணி மகன் அற்புதமணி (30) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அன்று மாலையில் வேலையை முடித்து மீண்டும் அதே லோடு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது லோடு ஆட்டோவுக்குள் 6 ெபண்களும், பின்பக்க கதவில் 4 பெண்களும் அமர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கடாசலபுரம் கிராமத்தில் இருந்து வெள்ளாரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, லோடு ஆட்டோவின் பின்பக்க கதவு உடைந்தது. இதில் அமர்ந்து பயணம் ெசய்த வீரன் சுந்தரலிங்கம் நகர் பெருமாள் மனைவி சுப்புக்கனி (45), கவர்னகிரி சுந்தரம் மனைவி வீரலட்சுமி (35), ஜெயசந்திரன் மனைவி முத்துமாரி (40), செந்தூர்ப்பாண்டி மனைவி சசிகலா (48) ஆகிய 4 பேரும் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர். டிரைவரும் உடனடியாக லோடு ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 4ெபண்களையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புகனி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த வீரலட்சுமி, முத்துமாரி மற்றும் சசிகலா ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory