» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் : கனிமொழி எம்பி

ஞாயிறு 14, ஜூலை 2024 9:38:23 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து கனிமொழி எம்பி நன்றி கூறினார். 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி, இன்று (14/07/2024) தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் தொடங்கி, முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விலக்கு, முத்தையாபுரம் பங்க் சந்திப்பு, அய்யன் கோவில் தெரு, தோப்புத் தெரு, ஏ.வி.எஸ். பள்ளி அருகில், சத்யா நகர், பக்கிள்புரம் சந்திப்பு, போல்டன்புரம் K.S.P.S. தியேட்டர் அருகில், சிதம்பர நகர் சந்திப்பு, பிரையண்ட் நகர் 12வது தெரு மத்தி, பிரையண்ட் நகர் 12வது தெரு மேற்கு கட்டபொம்மன் நகர், வள்ளிநாயகபுரம் சந்திப்பு, பிரையண்ட் நகர் 7வது தெரு மேற்கு, 3வது மைல், பாலிடெக்னிக் எதிரில் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். 

கனிமொழி எம்.பி பேசியது: உங்களுடைய மக்களவைப் பிரதிநிதியாக பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை இரண்டாவது முறையாக எனக்கு வழங்கியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் என்றார். தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory