» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஸ்ரீகாந்தாரியம்மன் கோவில் கொடை விழா
ஞாயிறு 14, ஜூலை 2024 8:43:46 PM (IST)
தூத்துக்குடி செல்சீனி காலனி ஸ்ரீகாந்தாரியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோவி்ல் கொடை விழா வெகு விமரிசையாக நடந்தது.
தூத்துக்குடி செல்சீனி காலனி ஸ்ரீகாந்தாரியம்மன், பேச்சியம்மன், வேம்படி சுடலைமாடசாமி கோவி்ல் கொடை விழா கடந்த 5ம்தேதியன்று கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் 10 ம்தேதி மாலையில் தீர்த்தவாரியும், மகுடம் அணிவித்தலும் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கையுடன் மாசிலாமணிபுரம் காந்தாரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் புறப்பதடுதல் நிகழ்ச்சியும் நடந்து.
11ம்தேதியன்று கணபதி பூஜை, லெஷ்மி பூஜை, கும்ப பூஜை, தனபூஜை,கோமாதாபூஜை,நவக்கிரகபூஜை, அனுக்கை பூஜை ஆகியவை நடந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7மணிக்கு அம்மன் மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையை தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பரிவாரமூர்த்திகளுக்கும், விமானத்திற்கும் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அம்பாளுக்கு அலங்காரமும் உச்சிகால பூஜைையும் நடந்தது. 12ம்தேதி மாலை அக்கினி சட்டி எடுத்து வருதல், நேமிசை வலம் வருதல் நடந்தது. தொடர்ந்து குரும்பூர் கலைஜீவன் சின்னதம்பியின் கனியான் கூத்தும், இலத்தூர் சாமிதுரை வில்லிசையும் நடந்தது. மேலும் சாமக்ெகாடை, பொங்கல்வைத்தல், மஞ்சள்பால் அடித்தலும் அதனை தொடர்ந்து இரவு அன்னதானமும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அக்தார் வேல்சாமி தலைமையில் நிர்வாகிகள் ஐகோட் சின்னதுரை, பலவேசமுத்து, ஆறுமுக நயினார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
KalaJul 15, 2024 - 04:35:52 PM | Posted IP 172.7*****