» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 13, ஜூன் 2024 10:07:14 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் முகாம் நடைபெறும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை 20வது வார்டுக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஏற்கனவே PMJAY- CMCHIS திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட இருக்கின்றது.
ஆகவே அந்தப் பகுதியைச் சார்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் மீதமுள்ள மாநகர பகுதிகளுக்கும் வரும் நாட்களில் வழங்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.