» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையோரம் உறங்குபவர்களுக்கு போர்வை : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!

புதன் 25, டிசம்பர் 2024 8:02:24 PM (IST)



தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி போர்வைகளை வழங்கினார். 

தூத்துக்குடி மாநகர பகுதியில் இரவு நேரங்களில் ஆதரவற்ற முதியவர்கள், வீடு இல்லாதோர் சாலை ஓரத்தில் உறங்குகின்றனர்.‌ தற்போது அதிக அளவில் பனி பொழிவதால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் போர்வைகள் வழங்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி துவங்கி வைத்தார். 

மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ், பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் காட்சன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் உறங்கும் முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

KumarDec 26, 2024 - 09:51:01 AM | Posted IP 172.7*****

அவர்களை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடலாமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory