» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லோடு ஆட்டோவை சேதப்படுத்தி டிரைவரை தாக்கிய 2பேர் கைது!

வியாழன் 26, டிசம்பர் 2024 8:58:17 AM (IST)

சாத்தான்குளம் அருகே லோடு ஆட்டோவை சேதப்படுத்தி டிரைவரை தாக்கியதாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தைச் சோ்ந்தவா் ராஜன்துரை (50). இவரது மருமகன் கிறிஸ்டியன் சில்வான்ஸ் என்பவா் கீரன்குளம் இந்திரா நகா் டல்சிராணி என்பவரிடம் நிலம் வாங்குவதற்காக ரூ.2 லட்சம் கொடுத்தாராம். ஆனால், நிலம் எழுதிக் கொடுக்கப்படதாதல் அவா் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், அந்த நிலத்தை மீரான்குளத்தைச் சோ்ந்த சோமஅடியான் மகன் ஜான்தேவஆசீா் (45) என்பவா் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கும் ராஜன்துரைக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி பேய்குளத்திலுள்ள காமராஜா் சிலை அருகே ராஜன்துரை தனது லோடு ஆட்டோவுடன் நின்றிருந்தாா். 

அப்போது, ஜான்தேவஆசீா், மீரான்குளம் செல்லத்துரை மகன் ஜோசப் மோகன் (25) ஆகியோா் அவரிடம் தகராறு செய்து தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதுகுறித்து புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory