» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் ஞாயிறு பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா
வியாழன் 26, டிசம்பர் 2024 9:00:44 AM (IST)
நாசரேத்தில் ஞாயிறு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்மஸ் கேரல் மற்றும் மரவிழா நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஆசரித்து வருகின்றனர். அதன்படி நாசரேத்தில் ரெவரென்ட் சாமுவேல் ஐயர் கனகராஜ் தெரு ஜெப குழு சார்பாக ஞாயிறு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்மஸ் கேரல் மற்றும் மரவிழா நடத்தப்பட்டது. இதில் தூய யோவான்பேராலயம் உதவி குரு பொன்சேகர் அசோக்குமார் ஜெபித்து துவக்கி வைத்தார்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடனம் நாடகம் போன்றவை நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு பலவித வேத வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பிள்ளைகள் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முடிவில் தூய யோவான் பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் ஆலோசனை கூறி ஜெபித்து ஆசீர்வாதம் கூறினார். விழா ஏற்பாடுகளை பொறுப்பாளர் எபநேசர் தலைமையில் முத்துராஜ் ஆசிரியர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.