» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்: மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்!
வியாழன் 26, டிசம்பர் 2024 10:35:30 AM (IST)
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் பகுதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், சுகாதாரக்கேடு பரவும் அபாயத்தையும் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
KumarDec 26, 2024 - 11:15:30 AM | Posted IP 162.1*****