» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!
புதன் 25, டிசம்பர் 2024 3:53:51 PM (IST)
கோவில்பட்டியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்திட மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
நாடு முழுவதும் டிச.25ஆம் தேதி வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் உள்ள ஓவியமணி கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் வேலுநாச்சியாரின் மாஸ்க் அணிந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்திட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியாரின் மாஸ்க் அணிந்து வீரமங்கையின் புகழை உலகிற்கு பறைசாற்றவும், நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம்,ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகிகள் முருகபூபதி முத்துகோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.