» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுட்டெரிக்கும் வெயிலில் நடு பஜாரில் நிற்கும் பேரூந்து : பயணிகள் அவதி!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:49:29 PM (IST)



சாத்தான்குளத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் நின்று பேருந்தில் ஏற வேண்டிய அவல நிலை நிலவுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கேடி கோசல்ராம் பழைய பஸ் நிலையம் பழுதுபட்டுள்ளதால் தற்பொழுது சுமார் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. தற்காலிகமாக அனைத்து போக்குவரத்து பேருந்துக்களும் சாலையில் கொளுத்தும் வெயிலில் நடு பஜாரில் நின்று ஏற்றி செல்கின்றனர். இதேபோல் பயணிகளும் பொதுமக்கள் மேல் கூரை செட் இல்லாமலும் உட்கார இடம் இல்லாமலும் கொளுத்தும் வெயிலில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். 

சாத்தான்குளத்தில் கடந்த ஒரு வார காலமாக சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் வெப்ப காற்று வீசி வருகிறது .மாலை 3 மணிக்கு மேல் மெயின் பஜாரில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுவதால் மின்விசிறிகள் இயங்க முடியாமல் பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகளும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய பஸ் நிலைய பணிகள் தாமதம் ஆவதால் வெளியூர் பயணிகள் பொதுமக்கள் பேரூந்துக்காக நடு பஜாரில் காத்து நிற்கும் அவலநிலை மாறிட தற்காலிகமாக மேல் கூறை அமைத்து உட்கார இடவசதி அமைத்திட பேரூராட்சி நிர்வாகத்தினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory