» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் வருமான வரி பற்றிய சிறப்புக் கூட்டம்!

சனி 4, மே 2024 8:07:01 PM (IST)



தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் "வருமான வரி புது படிவங்கள் மற்றும் சமீபத்திய திருத்தங்கள்” பற்றிய சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையாளர் செல்வகணேஷ் 2024 – 2025-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான புது படிவங்கள் பற்றியும், வருமான வரியில் தற்போதைய திருத்தங்கள் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். 

மேலும், AY 2024-25 ITR படிவங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாற்றங்கள், 2023 நிதிச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, வருமான வரிச் சட்டம், 1961-ல் உள்ள திருத்தங்கள் முதன்மையாக பின்பற்றப்படுகிறது . எடுத்துக்காட்டாக, பிரிவு 43-B இன் கீழ் ஒரு புதிய விதி வருமான வரியில் சேர்க்கப்பட்டுள்ளது. MSME- களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், MSME சட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் செலுத்தப்படாத குறு அல்லது சிறு வணிகங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளுக்கான விலக்குகளை சட்டம் தடை செய்கிறது.

ITR-2 மற்றும் ITR-3 ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வருமான வரி தணிக்கைக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக வருமானம் உள்ளவர்கள் ITR-3-ஐ அக்டோபர் 31, 2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வருமான வரித் துறையானது வருமான வரித்தாக்கல் செய்ய ஏழு தனித்துவமான படிவங்களைக் கொண்டுள்ளது. அதாவது ITR-1, ITR-2, ITR-3, ITR-4,ITR-5, ITR-6 மற்றும் ITR-7.

வணிகர்கள் மற்றம் தொழிலதிபர்கள் தங்களது தணிக்கையாளர்கள் மூலம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் பொழுது வணிகத்தில் ஈட்டக்கூடிய வருமானம் முழுவதும் ஜீவல்ஸ் உட்பட முறையாக கணக்கில் கொண்டு வர வேண்டும் என கூறினார். தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

வருமான வரி அதிகாரிகள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சோதனையிட வந்தால் முதலில் அவர்களிடம் ID Card கேட்டு அது சரியானதா என தெரிந்த பின்பு சோனையிட அனுமதிக்க வேண்டுமெனவும், சந்தேகம் ஏற்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அங்குள்ள காவல் ஆய்வாளரை வரவழைத்து சோதனையிட வந்திருக்கும் வருமான வரி அதிகாரிகள் உண்மையான அதிகாரிகள்தானா என கூறிய பின்பு, அவர்களை சோதனையிட அனுமதிக்க வேண்டுமென கூறினார்.

மேலும், முதன்மை ஆணையாளர் கூறுகையில், வருமான வரி சோதனையில் பணமாக பல கோடி ரூபாய், மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார். இதை தவிர்க்கும் பொருட்டு பெரு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருமான வரி சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டுமென்றும், முறையாக வருமான கணக்கை வைத்திருக்க வேண்டுமென்றும் கூறினார். 

வர்த்தக சங்க நிர்வாகச் செயலாளர் பிரேம் பால்நாயகம் அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினருக்கு, சங்க முன்னாளர் தலைவர் ஜோ பிரகாஷ் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், வர்த்தக சங்கத்தின் 40 ஆண்டு கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட "Chronicle Coffee Table Book”- வெளியிடப்பட்டது. சங்க செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேய பிரபு, ஏ.எஸ்.ராமசாமி, எம்.சண்முகம் மற்றும் டி.விசாகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory