» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் : தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை!

வியாழன் 25, ஏப்ரல் 2024 4:55:00 PM (IST)



தூத்துக்குடி இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி செயலாளர் ஆர். கோடீஸ்வரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரம நாயகம் ஆகியோர் தெற்கு ரயில்வே மதுரை கூடுதல் கோட்ட மேலாளர் சி.செல்வத்தை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். 

அவர்கள் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடியிலிருந்து தினசரி மைசூரு, சென்னை ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில்கள் அனைத்தும் மே- ஜூன் (2024) மாதங்களில் அதிகமாக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் முகமாக தூத்துக்குடி இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலையில் "வந்தே பாரத் ரயில்" தினசரி இயக்க வேண்டும்.

மேலும், காலையில் வண்டி எண் 06667-06668 திருநெல்வேலி -தூத்துக்குடி- திருநெல்வேலி பெட்டிகளை வைத்து தூத்துக்குடி - மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இருக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி- பாலக்காடு , திருநெல்வேலி "பாலருவி விரைவு ரயிலை"யும் உடனடியாக தூத்துக்குடி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வண்டி எண். 06125-06126 திருச்சியில் இருந்து காலை புறப்படும் காரைக்குடி / வண்டி எண். 06885-06886 மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தாங்கள் மேற்க்காணும் கோரிக்கைகளை விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

J.Mahabob Hussainமே 1, 2024 - 10:51:09 PM | Posted IP 172.7*****

Kindly take steps to implement a new train from Tuty to trivandrum daily express and tuty to madurai direct passenger train daily in the morning hours

Ramar Brayantnagar tuticorinApr 30, 2024 - 12:53:21 PM | Posted IP 172.7*****

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு வண்டியை திருச்சி - தூத்துக்குடி திருவனந்தபுரம்-வழியாக இரு மார்க்கத்திலும் இயக்க நடவடிக்கை தேவை.பயணியர் நலச்சங்கம், மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவும்.

Ramar Brayantnagar tuticorinApr 30, 2024 - 12:53:21 PM | Posted IP 172.7*****

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு வண்டியை திருச்சி - தூத்துக்குடி திருவனந்தபுரம்-வழியாக இரு மார்க்கத்திலும் இயக்க நடவடிக்கை தேவை.பயணியர் நலச்சங்கம், மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவும்.

JanarthananApr 28, 2024 - 08:32:36 PM | Posted IP 172.7*****

Thoothukudi_vilathikulam_Aruppukkottai train route quickly

Control+G J. SAMUELApr 28, 2024 - 08:19:15 PM | Posted IP 172.7*****

Tuticorin to Chennai daytime train is required and Tuticorin to Coimatore daytime and night train is much need3ed by business people.

சகாயராஜ்Apr 28, 2024 - 03:18:23 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி முதல் கோவை தினசரி இயக்கப்பட்ட ரெயில் கொரானா காரணமாக நிறுத்தப்பட்டது.அதை மீண்டும் இயக்க எதற்காக பயணிகள் நல சங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை.பயணிகள் நல சங்கம் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் நலனுக்காக அந்த ரெயிலை இயக்க கோரிக்கை வைக்க வில்லை என்று பொதுமக்கள் கூறுவது உண்மை தான் போல் தெரிகிறது

தமிழன்Apr 27, 2024 - 06:58:53 PM | Posted IP 172.7*****

இந்தியன் சேம்பேர் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் .

ChitraApr 27, 2024 - 08:41:52 AM | Posted IP 172.7*****

Super sir everybody expected the good news thankyou for your effect 🙏🙏🙏

ஜான் செல்வராஜ்Apr 27, 2024 - 08:11:08 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி - விளாத்திகுளம் - அருப்புக்கோட்டை - மதுரை திட்டத்தை நீண்ட காலமாக கிடப்பில் போடாமல் பணிகளை மீண்டும் துவங்கி விரைவில் முடிக்க வேண்டும்

போங்க போங்கApr 27, 2024 - 08:06:20 AM | Posted IP 172.7*****

அப்படியே சொல்லிட்டே ஒட்டிட்டே இருங்கள் வரும் ஆனால் வராது , அரசியல்வாதிகளை செருப்பால் அடித்தால்தான் வரும்

BalamuruganApr 26, 2024 - 07:46:19 PM | Posted IP 162.1*****

Good move

செல்வகுமார்Apr 26, 2024 - 04:28:10 PM | Posted IP 172.7*****

அருமையான செயல். வாழ்த்துக்கள்

PremDec 23, 1714 - 07:30:00 PM | Posted IP 172.7*****

keep on you people are asking, result nothing. association and sourthern railways always pose for news purpose only. our elected representatives ,people are always not at all botherd for thoothukdi development. no day time trains, no new trains started( board approved already ,still not running)

G. குழந்தை வேலுApr 26, 2024 - 01:28:30 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் 🌹. ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்குமா?

Nalama venkatesanApr 26, 2024 - 11:08:22 AM | Posted IP 172.7*****

Good sir valga valamudan

UnknownApr 26, 2024 - 10:08:43 AM | Posted IP 162.1*****

Until the last , all of you only rising request only . Never happen anything until enforce government

UnknownApr 26, 2024 - 10:08:42 AM | Posted IP 172.7*****

Until the last , all of you only rising request only . Never happen anything until enforce government

ஓட்டு போட்ட முட்டாள்Apr 26, 2024 - 09:45:20 AM | Posted IP 172.7*****

மக்கள் தான் தேர்ந்தெடுத்த விமானத்தில் சுத்தும் சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளை தான் நாக்கை பிடுங்கி கேள்வி கேக்கணும்.

GaneshApr 26, 2024 - 08:59:46 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி இருந்து via ஆறுமுகநேரி திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் கோரிக்கை வைக்க வேண்டும்.

PalaniApr 26, 2024 - 05:48:01 AM | Posted IP 172.7*****

Indian railway to create new way from THOOTHUKUDI VIA- ETTAYAPURAM -ARUPPUKOTTAI-MADHURAI- VIRALIMAKAI-TRICHY-VILLUPURAM-CHENNAI Its save money and Time so railway wilk consider this way.

SeenirajApr 26, 2024 - 05:42:21 AM | Posted IP 162.1*****

Many of them will expect the train between madurai and thoothukudi morning time. Or to create MONO trains between thoothukudi and madurai itis necessary for future.

TULSI DEEPAK SINGH BALAJISINGHApr 26, 2024 - 12:12:30 AM | Posted IP 172.7*****

Track doubling between Chennai and kanniyaakumari could definitely benefit every intermediary cities in the eastern corridor thanks God

மதன்Apr 25, 2024 - 10:43:57 PM | Posted IP 172.7*****

விரைந்து நடத்தி தரும்படி தூத்துக்குடி மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்..

கனிராஜ்Apr 25, 2024 - 06:27:34 PM | Posted IP 172.7*****

இந்தியன் சேம்பர் வெச்ட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory