» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நூறு நாட்களைக் கடந்தும் வடியாத வெள்ளம் : விவசாயிகள் வேதனை

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:12:34 AM (IST)



உடன்குடி அருகே வட்டன்விளையில் 100 நாட்களைக் கடந்தும் வட்டன்விளையில் விளைநிலங்களில் வடியாத வெள்ளத்தால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சடையநேரி குளம் நிரம்பி, கரை உடைந்ததால், வட்டன்விளை, வெள்ளாளன்விளை, செட்டிவிளை, மாணிக்கபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளையும் வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

வெள்ளாளன்விளையில் மாதக்கணக்கில் வீடுகளுக்குள் தேங்கிய வெள்ளம் மெல்ல வடிந்தது. எனினும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கிய வெள்ளம் 100 நாட்களைக் கடந்தும் இன்னும் வடியவில்லை. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. முருங்கை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அழுகும் நிலையில் உள்ளன. விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு செல்ல முடியவில்லை.

கோடைக்காலத்தில் பதனீர் சீசன் தொடங்கிய நிலையில், விளைநிலங்களில் வெள்ளம் வடியாததால் பனைத் தொழிலாளர்களும் பனையேற முடியவில்லை. இதனால் கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வட்டன்விளையைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையிலும், விளைநிலங்களில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கிய தண்ணீரால் தரையில் சேறும் சகதியுமாக உள்ளது. தண்ணீர் சூழ்ந்த தோட்டங்களுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது.

எனவே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, செட்டிவிளை உள்ளிட்ட பகுதிகளில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து, தண்ணீரை வடிய வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இங்கு புதிய குளங்களையும் உருவாக்க வேண்டும்’’ என்றனர்.


மக்கள் கருத்து

Manivannan.Apr 1, 2024 - 10:43:28 AM | Posted IP 172.7*****

https://youtu.be/zcWdyp1Ipps?si=43EKYSFxcgSGe8wF. காணொளி காட்சிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory