» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 45 ஆண்டுகளுக்கு பின் சாலை அமைப்பு - மாநகராட்சிக்கு பாஜக பிரமுகர் நன்றி!
சனி 10, பிப்ரவரி 2024 10:03:19 AM (IST)
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சாலை அமைத்துக் கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாஜக பிரமுகர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஆர்.காசிலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் டூவிபுரம் 10வது தெரு சந்து பகுதியில் சுமார் 45 ஆண்டு காலம் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பு மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடமும் மனு அளித்திருந்தேன். தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
RaveendranFeb 12, 2024 - 01:21:37 PM | Posted IP 172.7*****