» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2¼ கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது!
செவ்வாய் 21, நவம்பர் 2023 9:24:04 PM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஆகியோர் இன்று (21.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 1வது இரயில்வே கேட் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி தெர்மல்நகர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பெரியநாயகம் (48) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் பெரியநாயகம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3பேர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 8:06:04 AM (IST)

சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் ஹாக்கி : செயில் ஹாக்கி அணிகள் சாம்பியன்
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:55:09 AM (IST)

அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு உரிமை இல்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:51:56 AM (IST)

திருச்செந்தூா் பக்தா் பலி : பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:46:44 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)

அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை
வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)

P.S. RajNov 21, 2023 - 09:38:13 PM | Posted IP 172.7*****