» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோயிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
செவ்வாய் 21, நவம்பர் 2023 7:57:11 PM (IST)
தூத்துக்குடி சிவன் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் என்று அழைக்கப்படும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிலையிைல், கந்த சஷ்டி திருவிழா 9ஆம் திருநாளான இன்று இரவு அருள்மிகு சுப்ரமணியர் தீர்த்தவாரி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.