» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாயை சுற்றிலும் பென்சிங் வேலி அமைக்கும் பணி : மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு!

செவ்வாய் 21, நவம்பர் 2023 4:45:55 PM (IST)



விளாத்திகுளம் அருகே ஆதனூர் கிராமத்தில்   கண்மாயை சுற்றிலும் பென்சிங் வேலி அமைக்கும் பணிகளை மார்கண்டேயன்  எம்எல்ஏ ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் கிராமத்தில் கண்மாய் குளக்கரை அருகே பள்ளி உள்ளதால் கண்மாய் நிரம்பியுள்ள நிலையில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி  கண்மாயை சுற்றிலும் பென்சிங் வேலி அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் சென்று பார்வையிட்டு பென்சிங் வேலி அமைப்பதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10000 நிதி உதவியும், அரசின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு வாரத்திற்குள்  பென்சிங் வேலி அமைத்து தருகிறோம் என்றும் உறுதி கூறினார்.

நிகழ்வில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் காசிவிஸ்வநாதன் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி ஆதனூர்  ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஹரிபாலகிருஷ்ணன் கிளைச் செயலாளர் மூக்கையா மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory