» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவர்களை நாட்டின் முதல் பாதுகாவலர்கள் : தூத்துக்குடியில் ஆளுநர் பேச்சு!

செவ்வாய் 21, நவம்பர் 2023 3:08:10 PM (IST)



கடலை பாதுகாக்க மீனவர்களால் மட்டும்தான் முடியும் என தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மீனவர் தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். 

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் உலக மீனவர் தின வெள்ளி விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மீனவ சுதந்திர போராட்ட தியாகிகளின் பிள்ளைகளுக்கு விருதுகள், மீனவ ஆளுமைகள் விருது மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விருதுகள் ஆகியவைகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் மீனவர்கள் தங்களது பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக ஆளுநரிடம் எடுத்துறைத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் "உலக மீனவர் தினத்தில் மீனவர்களுடன் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் சந்தோசத்தை தருகின்றது. இரண்டு மாதத்திற்கு முன்னால் செப்டம்பர் 21-ம் தேதி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன் குறைகளை கேட்ட உடன் மத்திய அரசிடம் உடனடியாக தெரிவித்தேன். மேலும் தனிப்பட்ட முறையில் மத்திய மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து மீனவர்களின் பிரச்னைகள் குறித்தும் பேசினேன். 

மீனவர்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி தருவேன். நமது மீனவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார்கள். மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடித்து மக்களுக்கு சத்தான மீன்களை கொடுக்கின்றனர். அதைபோல் உலகம் முழுவதும் எடுத்து கொண்டால் காய்கறிகளை வைத்து நமது ஊட்டசத்தை எடுத்து கொள்ள முடியாது. எனவேதான் மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை வைத்தும் நாம் ஊட்டசத்தை பெருக்குகின்றோம்.

மேலும் மீனவர்களை நாட்டின் முதல் பாதுகாவலர்கள் ஆவார்கள். நமது இந்திய தேசம் மிகபெரிய கடல் பரப்பை கொண்டதாக உள்ளது. நாட்டினை பாதுகாக்க எவ்வளவு படைகள் இருந்தாலும் கடலை பாதுகாக்க மீனவர்கள் உள்ளனர். மரைன் போலீசில் மீனவ இளைஞர்கள் பங்குபெற வேண்டும். மற்ற மாநிலங்களை பார்க்கும் போது கடலில் நீச்சல் கூட அடிக்ககூட முடியாதவர்கள்தான் இருக்கின்றார்கள். ஆனால் நமது மீனவர்கள் அப்படி இல்லை மிகவும் திறமையானவர்கள். 

கடலோர காவல்படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசிடம் வழிவுறுத்துவேன் ஏனென்றால் அவர்களால்தால் கடலை காப்பாற்ற முடிவும். சிறப்பு பொருளாதர மண்டலத்தில் மீனவர்கள் நினைத்தால் வளர்ச்சி திட்டத்தில் கொண்டு வரலாம். 24-மீண்டர் நீளம் கொண்ட படகுகள் லைசன்ஸ் இல்லாமல் இருக்கிறது அவை சரிசெய்யப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பு என்பது உடனே பிடித்து கரைக்கு கொண்டு வருவது அல்ல. மீன்பிடி தொழில் என்பது நாட்டின் மிகபெரிய வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறது.

மீனவ சமுதாயத்தில் சரியான பிரதிநிதிதுவம் இல்லாததால் சட்டமன்றம், பாராளுமன்றம், பஞ்சாயத்தில் பின்னடைந்து வருகிறது. பாரத பிரதமர் மீனவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார். நான் பாரத பிரதமரிடம் பேசும்போதெல்லாம் பிரதமர் மீனவர்களை பற்றிதான் அதிகம் பேசுவார்.மத்திய அரசு அறிமுகபடுத்திய மீனவர் மேம்பாட்டு திட்டம் வருங்காலத்தில் மிகபெரிய வளர்ச்சியடையும். 

மீனவர்களின் கோரிக்கைகளை கேட்க என்னுடைய கதவு எப்போதும் திறந்து இருக்கும். மீனவர்கள் மீன்பிடி தொழில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் திறமையானவர்கள். ராமநாதபுரத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மீனவ சிறுவர், சிறுமிகள் செய்த யோக உள்ளிட்ட விசயங்கள் அனைத்தும் பிடித்திருந்தது. மீனவர் சமுதாயம் அனைத்து துறைகளிலும் மிகபெரிய வளர்ச்சியடையும் என நான் உறுதியாக கூறுகின்றேன். உலக மீனவர் தினத்தில் அனைத்திலும் மீனவர்கள் வெற்றிபெற நான் மீனவர்களை வாழ்த்துகின்றேன் என்றார். 



இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ளஉலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தை ஆளுநர் ஆர் என் ரவி பார்வையிட்டார். பின்னர் சிறப்பு வழிபாடு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு பாத்திமா நகர் பங்குதந்தை யேசுதாசன், பனிமய மாதா போட்டோவை வழங்கினார். பின்னர் தூத்துக்குடி தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடைபெற்ற விசைபடகு உரிமையாளர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory