» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய அாிய வகை பெருந்தலை ஆமை !
செவ்வாய் 24, அக்டோபர் 2023 8:35:27 PM (IST)

தூத்துக்குடி அருகே அாிய வகை பெருந்தலை ஆமை கரை ஒதுங்கியது.
தூத்துக்குடியை அடுத்து உள்ள தருவக்குளத்தில் கண்ணாடி இழை படகில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் மன்னாா்வளைகுடா உயிா்கோள காப்பக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகமான சுற்றுலா பயணிகள் தினமும் இந்த படகில் சவாாி செய்து வருகின்றனா். படகு சவாாி நிறைவு பெற்ற பின்னா் அந்த பகுதியில் இருந்து வனத்துறை பணியாளா் டிட்ரோஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது கடலில் இருந்து அாிய வகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியதைப் பாா்த்து உடனடியாக அவர் வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவத்தார். மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பக வனத்துறையினா் ரேஞ்சா் ஜினோபினோஸ் ஆலோசனையின் போில் பாரஸ்டா் மதன்குமாா் வனக்காப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இது குறித்து வனத்துறையினா் கூறுகையில் "இவை தடை செய்யப்பட்ட அறிய வகை பெருந்தலைஆமையை நாங்கள் கண்டதில்லை. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது புதியபுத்தூா் கால்நடை மருத்துவா் மூலம் பிரேதபாிசோதனை செய்யப்பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்படும் என்றாா். அரிய வகை ஆமை கரை ஒதுங்கியதை அப்பகுதி மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 9:31:10 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தரிசனம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:21:49 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:04:43 PM (IST)

கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:23:54 PM (IST)

சமத்துவநாள் விழாவில் ரூ.13.74 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:19:57 PM (IST)

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: ஆன்மிக இயக்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 3:34:24 PM (IST)
