» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முப்பெரும் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:22:59 PM (IST)
தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் காந்தி ஜெயந்தி விழா, சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா கூட்டம் திரேஸ்புரம் ஜங்ஷனில் வைத்து சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், மத்திய பாஜக அரசின் அவல நிலையை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வருகிற 2024 ஆம் ஆண்டு மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் எனவும் எடுத்து கூறினார்கள். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் மாநகர் துணைத் தலைவர் சேக் முகமது, கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநகர மாவட்ட பொருளாளர் மிக்கேல், மாநகர துணைத் தலைவர் அபுதாஹீர், சிறுபான்மை நகர செயலாளர் முகம்மது பஷீர், மாநில பேச்சாளர் மஜீத், சிறுபான்மை மாநிலத் துணைத் தலைவர் ஷாஜகான், மாநில சிறுபான்மை ஒருங்கிணைப்பாளர் செய்யது இப்ராஹிம், வடக்கு மண்டல தலைவர் சேகர், கோபால், ஏ டி பிரபாகரன், நகரச் செயலாளர் ஜெபராஜ், ஜெயராஜ், ஆரோக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
n.shajahan,pcc member,tamil nadu Congress comity.Oct 4, 2023 - 09:56:00 AM | Posted IP 172.7*****
செய்திகளை மிக அருமையாக முந்தி தருவது பாராட்டுக்குறியது, உங்கள் ஆன்லைன் செய்தி சேவை மக்களுக்கு பயன் பெற வாழ்த்துக்கள்,n.shajahan pcc member,tamil nadu Congress comity. 7305522550
n.shajahan,pcc member, Tamil nadu Congress comity.Oct 4, 2023 - 09:59:14 AM | Posted IP 172.7*****