» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. புதுவிதமான தொண்டை வலி, காய்ச்சல், கடுமையான தலைவலி போன்ற அறிகுறிகளை தெரிவிக்கின்றனர். இதில் அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் குழந்தைகள் அதிகம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பொது சுகாதார துறை தற்போது காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் கள ஆய்வு நடத்த வேண்டும். மேலும், தூத்துக்குடியில் பெரிய பிரச்னையாக கொசுக்கள் தொல்லை உருவெடுத்திருக்கிறது. இதனால், தூங்காத கொசுக்கள் மக்களை தூங்க விடாமல் அச்சுறுத்துகின்றது.  

தற்போது, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவலுக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. எனவே டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாக கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகர் பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அதுOct 3, 2023 - 02:18:04 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி அமைத்த பாதாள சாக்கடைகள் தான் கொசுக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory