» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விநாயகர் சதுர்த்தி விழா : அமைச்சர், மேயர் பங்கேற்பு..!
திங்கள் 18, செப்டம்பர் 2023 7:59:42 PM (IST)
தூத்துக்குடி ஸ்ரீ போத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் ஆலயம், 1981-ல் தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமியால் சீரமைக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக விழாக்கள் நடைபெற்று வருகிறது. என்.பெரியசாமி தனது இறுதி காலம் வரை இக்கோவிலில் தர்மகர்த்தாவாக இருந்தார். அவரை தொடர்ந்து, அவரது பிள்ளைகளான அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இக்கோவிலை பராமரித்து வருகின்றனர். தற்போது அவரது மகனான என்.பி.ராஜா இக்கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, என்.பி.ராஜா, என்.பி.அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு அன்னதானத்தை அமைச்சர் மற்றும் மேயர் தொடங்கி வைத்தனர்.