» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு பூஜை-பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 18, செப்டம்பர் 2023 10:13:41 AM (IST)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பாக தபசு மண்டம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் மற்றும் கோமாதா பூஜை நடைபெற்று காலை 7.10 மணியளவில் பிரதான பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் தலைமை வகித்தார். இந்து முன்னணியைச் சேர்ந்த மாரியப்பன், சக்திவேல்,திருப்பதி வெங்கடேஷ், ஆதிநாத ஆழ்வார், சிபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பாக நடைபெறும் விநாயகர் ஊர்வலம், தபசு மண்டபத்தில் துவங்கி திரேஸ்புரம் சங்குமுக விநாயகர் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகரில் உள்ள பல விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில் சிறிய சிறிய சிலைகளை வைத்து இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 584 சிலைகள் வரை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 276 சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)
