» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!

புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)



கோவில்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் உடுக்கை வாசித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.

இதில், உடுக்கை வாசிப்பாளர் தட்சிணாமூர்த்தி உடுக்கை வாசித்தபடி மது ஒழிப்பு சம்பந்தமான பாடலைப் பாடினார். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கினர். இதில் தமிழ் மாநில கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் கே.பி.அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

VASANமே 31, 2023 - 04:52:07 PM | Posted IP 172.7*****

GOOD APPROACH.....

ஒன்னும்மே 31, 2023 - 03:27:17 PM | Posted IP 162.1*****

பண்ண வேண்டாம்... நேரா போய் குடிப்பவனை திருத்துங்கள்... வாங்குறவன் இல்லைனா விக்குறவன் இல்லை...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory